தமிழ்நாடு செய்திகள்
கோவிலுக்கு வந்த கவர்னருக்கு சிறப்பான வரவேற்பு அளித்த போது எடுத்த படம்.
சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நாகாலாந்து கவர்னர் இலா.கணேசன் சுவாமி தரிசனம்
- உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவைகளை செய்தார்.
- கோவிலின் சார்பாக கவர்னருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நாகாலாந்து கவர்னர் இலா. கணேசன் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார். மேலும், உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவைகளை செய்தார்.
கோவிலுக்கு வந்த இலா.கணேசனுக்கு அழிஞ்சிவாக்கம் பாஸ்கர் தலைமையில் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.கோவிலின் சார்பாக கவர்னருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.