தமிழ்நாடு செய்திகள்

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றி திரிந்த ஒற்றை காட்டு யானை

Published On 2023-01-28 10:04 IST   |   Update On 2023-01-28 10:04:00 IST
  • கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடிக்கடி யானைகள் சுற்றி திரிகின்றன.
  • நீண்ட நேரத்திற்கு பிறகு தானாகவே காட்டுக்குள் யானை சென்று விட்டது.

அரவேணு:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

இங்கு காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி வனத்தையொட்டி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகிறது.

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடிக்கடி யானைகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஒற்றை யானை ஒன்று கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை யானை சுற்றி திரிந்தது.

சாலையில் வெகுநேரம் நின்று சாலை ஓரங்களில் உள்ள செடி கொடிகளை சாப்பிட்டுக்கொண்டிருந்தது. இதனால் சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீண்ட நேரத்திற்கு பிறகு தானாகவே காட்டுக்குள் யானை சென்று விட்டது. அதன்பின்னரே வாகனங்கள் அங்கிருந்து சென்றன.

இதுபோன்ற ஒற்றை காட்டு யானை அடிக்கடி சாலையில் நின்று வருவதால் பெரிதும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறி வருகிறார்கள்.

Tags:    

Similar News