தமிழ்நாடு

வேப்பமரத்தடியில் பூமியில் சிவலிங்கம் இருக்கும் காட்சி

பண்ருட்டி அருகே விசேஷம்- பால் வடிந்த வேப்ப மரத்தின் கீழ் கிடைத்த சிவலிங்கம்

Published On 2023-06-06 07:08 GMT   |   Update On 2023-06-06 07:08 GMT
  • நேற்று இரவு புவனேஸ்வரிக்கு அருள் வந்து சாமி ஆடி உள்ளார்.
  • 10 அடி ஆழத்தில் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காட்டாண்டி குப்பத்தை சேர்ந்தவர் அமரேசன் (வயது 40), இவரது மனைவி புவனேஸ்வரி (35). இவர்கள் அதே பகுதியில் பச்சைவாழி அம்மன்கோவில் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவிலில் உள்ள பழமையான வேப்பமரம் ஒன்றில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பால் வடிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் நேற்று இரவு புவனேஸ்வரிக்கு அருள் வந்து சாமி ஆடி உள்ளார்.

சாமி ஆடியபோது வேப்பமரத்தின் அடியில் பூமியில் லிங்கத் திருமேனியாக சிவபெருமான் வீற்றிருக்கிறார். அவரை வெளியே எடுத்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பக்தர்கள் திரண்டு வேப்ப மரத்தின் அடியில் பள்ளம் தோன்டியுள்ளனர். 10 அடி ஆழத்தில் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது. இதனை யாரும் எடுக்க கூடாது என்று சாமி ஆடி புவனேஸ்வரி கூறினார். மேலும் பக்தர்கள் சிவாய நம, நம சிவாயம் என விண் அதிர கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News