தமிழ்நாடு செய்திகள்

மிச்சாங் புயல் பாதிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Published On 2023-12-06 14:53 IST   |   Update On 2023-12-06 15:47:00 IST
  • கனமழை காரணமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
  • கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு:

மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கனமழை காரணமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல் காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News