தமிழ்நாடு செய்திகள்
- அ.தி.மு.க. நிர்வாகிகள் மனதிலாவது இடம் பிடிக்கலாம் என்று அவர் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
- கொங்கு மண்டலத்தில் சசிகலா மேற்கொண்ட பயணம் படுதோல்வியை தழுவி இருக்கிறது.
அரசியல் அரங்கில் வாரத்துக்கு ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு தடவை சசிகலா ஏதாவது சொல்லி சரவெடி போட்டு விடுகிறார். என்றாலும் அவர் இன்னமும் மக்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை. சரி, அ.தி.மு.க. நிர்வாகிகள் மனதிலாவது இடம் பிடிக்கலாம் என்று அவர் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அதுவும் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுப்பதாக இல்லை.
சமீபத்தில் கொங்கு மண்டலத்துக்கு சசிகலா போனார். தனக்கு பின்னால் நிறைய பேர் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தார். இதன் மூலம் கொஞ்ச நாள் கெத்து காட்டலாம் என்று ஆசைப்பட்டார்.
அதுவும் நடக்கவில்லை. கொங்கு மண்டலத்தில் சசிகலா மேற்கொண்ட பயணம் படுதோல்வியை தழுவி இருக்கிறது. மீண்டும் சசிகலா சறுக்கி இருக்கிறார்.