தமிழ்நாடு

மீட்கப்பட்ட இடத்தில் அதிகாரிகள் வைத்துள்ள அறிவிப்பு பலகை.

நாகர்கோவில் அருகே வேதநகரில் அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

Published On 2022-09-30 07:16 GMT   |   Update On 2022-09-30 07:16 GMT
  • புத்தளம் பகுதியை சேர்ந்த அன்னக்கிளி என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்தார்.
  • மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.25 கோடி இருக்கும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. இதில் பல நிலங்களை தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அந்த நிலங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர்.

கரியமாணிக்கப்புரத்தில் உள்ள முப்பிடாரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் நாகர்கோவிலை அடுத்த வேதநகர் பகுதியில் ஹவாய் நகர் 9-வது தெருவில் உள்ளது.

இதனை புத்தளம் பகுதியை சேர்ந்த அன்னக்கிளி என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்தார். மொத்தம் 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்த அன்னக்கிளி எந்த விவசாயம் செய்யாமல் அப்படியே போட்டு இருந்தார்.

இந்நிலையில் அறநிலைத்துறைக்கு அன்னக்கிளி குத்தகை பாக்கி ரூ.17 லட்சம் வைத்து இருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் தங்கம் தலைமையில் சிறப்பு தாசில்தார் சஜித், முப்பிடாரி அம்மன் கோவில் செயல் அலுவலர் ரகு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் இன்று அந்த நிலத்தை மீட்டனர்.

அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.25 கோடி இருக்கும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த நிலத்தை வேறு நபருக்கு குத்தகை விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட இடத்தில் அதற்கான அறிவிப்பு பலகையையும் அதிகாரிகள் வைத்தனர்.

Tags:    

Similar News