தமிழ்நாடு செய்திகள்
ஆன்லைனில் தனியுரிமையை மதிக்கவும்- பெருநகர காவல்துறை எச்சரிக்கை
- தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் சிறை.
- ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீஸ் எச்சரிக்கை.
தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆன்லைனில் தனியுரிமையினை மதிக்கவும் என்றும் சென்னை காவல்துறை சமூக வலை்ததளத்தில் பதிவிட்டுள்ளது.
இதுகுறித்த சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆன்லைனில் தனியுரிமையினை மதிக்கவும்! தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66E படி, தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
தேசிய சைபர் கிரைம் உதவி எண் 1930
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.