தமிழ்நாடு

பாளை முருகன்குறிச்சியில் சாலையில் தேங்கிய மழை நீர்.

நெல்லையில் பரவலாக சாரல் மழை- மாஞ்சோலை பகுதியில் 15.8 சென்டி மீட்டர் மழை பதிவு

Update: 2023-02-03 07:25 GMT
  • நெல்லை மாவட்டத்தின் மற்ற இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்துள்ளது.
  • நெல்லை மாநகர பகுதியில் பெய்த மழை காரணமாக நகரின் பல இடங்களில் சாலையோரம் மழை நீர் தேங்கி கிடந்தது.

நெல்லை:

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை இலங்கையில் கரையை கடந்தது.

இந்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று நிலவ கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முதலே பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் நெல்லை மாநகர பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதே நேரம் மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக மாஞ்சோலை ஊத்து பகுதியில் 158 மில்லி மீட்டர் (15.8 சென்டி மீட்டர்) மழை பெய்துள்ளது. நாலுமுக்கு பகுதியில் 13.2 சென்டி மீட்டர், காக்காச்சி பகுதியில் 11.7 சென்டி மீட்டர், மாஞ்சோலையில் 10.1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

நெல்லை மாவட்டத்தின் மற்ற இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்துள்ளது. களக்காட்டில் 12.20 மில்லி மீட்டர், பாளையில் 10, பாபநாசத்தில் 13, மூலைக்கரைப்பட்டியில் 10, அம்பையில் 8, சேரன்மகாதேவியில் 7, மணிமுத்தாறில் 8.40, நாங்குநேரியில் 9, ராதாபுரத்தில் 2.40, நெல்லையில் 4.60, சேர்வலாறு அணை பகுதியில் 5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

கன்னடியன் கால்வாய் பகுதியில் 8.60, கொடுமுடியாறு அணை பகுதியில் 7, நம்பியாறு அணை பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மொத்தத்தில் ஒரே நாளில் 61.8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இது சராசரியாக 34.34 மில்லி மீட்டர் ஆகும்.

நெல்லை மாநகர பகுதியில் பெய்த மழை காரணமாக நகரின் பல இடங்களில் சாலையோரம் மழை நீர் தேங்கி கிடந்தது.

Tags:    

Similar News