அரக்கோணம் அருகே தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் சாலை மறியல்
- அரக்கோணம் நாகாலம்மன் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
- பொதுமக்கள் அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் நாகாலம்மன் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து பலமுறை அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்துள்ளனர்.
இந்த பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை விடுத்த நிலையில் நேற்று மாலையிலிருந்து அங்கு தொடர் மின்வெட்டு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரக்கோணம் திருத்தனிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.