தமிழ்நாடு செய்திகள்

தமிழக காவலர்கள் 23 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிப்பு

Published On 2024-08-14 10:11 IST   |   Update On 2024-08-14 12:38:00 IST
  • இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
  • ஜனாதிபதியின் மெச்சத்தக்க சேவைக்கான விருது தமிழகத்தில் 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

மத்திய அரசு ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்களை வழங்கி வருகிறது. மெச்சத்தகுந்த பணிக்காக இது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி பதக்கம் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த 23 போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.

ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் வன்னிய பெருமாள், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் பிரிவில் பணியாற்றி வரும் வன்னிய பெருமாள், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக், ஐ.ஜி.க்கள் கண்ணன் (தென் சென்னை கூடுதல் கமிஷனர்) ஏ.ஜி.பாபு (தகவல் தொழில் நுட்ப பிரிவு), கமிஷனர் பிரவின் குமார், அபினவ், சூப்பிரண்டுகள் பெரோஸ் கான் அப்துல்லா, சுவிஷ்குமார், கிங்ஸ்லின், ஷியாமளா தேவி, பிரபாகர், பாலாஜி சரவணன் உள்ளிட்டோருக்கும் ஜனாதிபதி விருது மற்றும் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் சூப்பிரண்டுகள் ராதாகிருஷ்ணன், ஸ்டீபன், டி.எஸ்.பி.க்கள் டில்லிபாபு, மனோகரன், சங்கு, இன்ஸ்பெக்டர்கள், சந்திரமோகன், ஹரிபாபு, தமிழ்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, ரவிச்சந்திரன், முரளிதரன் ஆகியோருக்கும் ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பதக்கங்களை அணிவித்து கவுரவிக்க உள்ளார்.

Tags:    

Similar News