தமிழ்நாடு

தமிழகத்தில் தொடங்கியது போலியோ சொட்டு மருந்து முகாம்

Published On 2024-03-03 02:15 GMT   |   Update On 2024-03-03 02:15 GMT
  • தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
  • சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

சென்னை:

போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43,051 மையங்களில் நடைபெறும்.

இந்த மையங்களில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை தொடங்கியது.

பல்லாவரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News