தமிழ்நாடு செய்திகள்

ஊட்டியில் கொட்டி தீர்த்த மழைக்கு வி.சி.காலனி குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

கொட்டி தீர்த்த மழை- ஊட்டியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

Published On 2023-05-25 09:55 IST   |   Update On 2023-05-25 09:55:00 IST
  • ஊட்டி, சேரிங்கிராஸ், மாா்க்கெட், கமா்ஷியல் சாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
  • ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட வி.சி.காலனியில் பெய்த மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் காணப்பட்டது.

தற்போது கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் குறைந்து இதமான கால நிலை நிலவி வருகியது. அவ்வப்போது மூடுபனியுடன் மழையும் பெய்து வந்தது.

இந்த நிலையில் நேற்று பிற்பகலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

ஊட்டி, சேரிங்கிராஸ், மாா்க்கெட், கமா்ஷியல் சாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

இதனால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

மழையில் இருந்து தப்பிக்க வாகனங்களில் சென்றவர்கள், வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு, பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட வி.சி.காலனியில் பெய்த மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வீடுகளுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் மழை நீரில் சேதம் அடைந்தது.

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வாளியை கொண்டு வெளியேற்றினர்.

திடீரென பெய்த மழையால் ஊட்டியில் கடும் குளிா் நிலவியது. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வெளியில் வராமல் தங்கும் விடுதிகளிலேயே முடங்கினா். குளிா் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News