தமிழ்நாடு

ஒடிசா ரெயில் விபத்து: அவதூறு கருத்து பதிவிட்ட வக்கீல் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Update: 2023-06-08 10:18 GMT
  • ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள்.
  • செந்தில்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்:

ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ரெயில் விபத்து குறித்து மத உணர்வை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் குமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த வக்கீல் செந்தில்குமார் என்பவர் கருத்து பதிவு செய்திருந்தார்.

இதுதொடர்பாக தக்கலை போலீசார் செந்தில்குமார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து செந்தில்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News