தமிழ்நாடு செய்திகள்

புதுப்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2023-09-26 15:29 IST   |   Update On 2023-09-26 15:29:00 IST
  • கார்த்திக் தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார்.
  • தற்கொலை குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை திரூரைச் சேர்ந்தவர் கார்த்திக்(26). தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவருக்கும் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஜீவிதா(வயது22) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் வீட்டில் இருந்த ஜீவிதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News