தமிழ்நாடு

 அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாலக்கொல்லை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியரிடம் குறைகளை கேட்டறிந்தபோது எடுத்த படம்.

16 கி.மீ. தூரம் நடைபயிற்சி சென்று சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர்

Published On 2024-01-31 04:08 GMT   |   Update On 2024-01-31 04:08 GMT
  • டாக்டர் நெய்வேலியில் தங்கி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவமனையில் பணிபுரிவதாக தெரிவித்தார்.
  • ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர், உங்கள் பணிக்கான நேரம் என்ன, உங்கள் வீடு எங்கே உள்ளது என்றார்.

விருத்தாசலம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாலை உளுந்தூர்பேட்டையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலக்கொல்லை வரை நடைபயிற்சி மேற்கொண்டார்.

பின்னர் அவர், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கு பணியில் இருந்த ஒரு சில செவிலியர்களிடம் குறைகள் பற்றி கேட்டறிந்ததுடன் டாக்டர்கள் எத்தனை பேர் பணியில் உள்ளனர் எனவும் கேட்டார். அதற்கு 2 டாக்டர்கள் பணியில் உள்ளதாக செவிலியர் கூறினார்.

தொடர்ந்து அவர், வட்டார மருத்துவ அதிகாரி யார், அவர் எத்தனை முறை இந்த மருத்துவமனைக்கு வருவார், மாவட்ட துணை சுகாதார இயக்குனர் யார், அவர் எத்தனை முறை வருவார் எனவும் செவிலியரிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரைசெல்போன் மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் உங்கள் பணிக்கான நேரம் என்ன, உங்கள் வீடு எங்கே உள்ளது என்றார். அதற்கு டாக்டர் நெய்வேலியில் தங்கி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவமனையில் பணிபுரிவதாக தெரிவித்தார்.

அப்போது மா.சுப்பிரமணியன், டாக்டரிடம் மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க கடிதம் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறேன், காலை 9 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து விடுங்கள் எனவும் கூறினார்.

Tags:    

Similar News