தமிழ்நாடு

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வீடு வீடாக சென்று பாத்திரம் துலக்க முடியாது- அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு

Published On 2022-11-08 04:22 GMT   |   Update On 2022-11-08 04:22 GMT
  • தி.மு.க. அரசின் மீதும், நிர்வாகம் மீதும் விமர்சனங்கள் வருகின்றன.
  • எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்வார்கள். அரசுக்கும் அது தெரியும்.

சாயல்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் துறைமுகத்தில் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கும் பங்க் திறப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-

இந்த தொகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அரசின் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நவாஸ்கனி எம்.பி.யும் அவரால் என்ன செய்ய முடியுமோ, அதனை செய்து வருகிறார்.

தி.மு.க. அரசின் மீதும், நிர்வாகம் மீதும் விமர்சனங்கள் வருகின்றன. இதேபோல் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதும் சமூக வலைதளத்திலும் குறைகள் கூறப்பட்டு வருகிறது. இது இயல்பானது. இதற்காக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்வார்கள். அரசுக்கும் அது தெரியும்.

விமர்சனங்கள் செய்கிறார்கள் என்பதற்காக வீடு வீடாக சென்று எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாத்திரங்களை துலக்க முடியாது. பொதுமக்களுக்கு தேவையானவற்றை நேரம் வரும்போது சரியாக செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News