தமிழ்நாடு செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 103.77 அடியாக சரிவு
- மேட்டூர் அணைக்கு நேற்று 992 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 993 கனஅடியாக அதிகரித்தது.
- தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயரும்.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து, தொடர்ந்து நாட்களாக 1000 கன அடியாக நீடித்த நிலையில், நேற்று விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று 992 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 993 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர்தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நேற்று 103.79 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 103.77 அடியாக சரிந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.