போராட்டம் நடத்திய போது எடுத்தபடம்.
மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூரம்: கைதான வாலிபரின் உருவ பொம்மையை தூக்கிலிட்டு காங்கிரசார் போராட்டம்
- சம்பவம் தொடர்பாக மணிப்பூரை சேர்ந்த ஹுய்ரெம் மொய்தே என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மணிப்பூர் சம்பவத்தில் கைதான வாலிபரின் உருவபொம்மையை தூக்கிலிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் போராட்டம் நடத்திய போது எடுத்தபடம்.***நெல்லை, ஜூலை.22-
மணிப்பூரில் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக கலவரம் நடந்து வருகிறது.
இதையடுத்து அங்கு ஆளும் பா.ஜனதா அரசை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் அங்கு குகி பழங்குடி யினத்தை சேர்ந்த 2 பெண் களை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் வன்கொ டுமை செய்யப்பட்டது போன்ற வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூரை சேர்ந்த ஹுய்ரெம் மொய்தே என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மத்திய அரசு மணிப்பூர் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று திட்டமிடப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக திடீரென மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையிலான காங்கிரசார் மணிப்பூர் பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் கைதான ஹுய்ரெம் மொய்தேவின் உருவ பொம்மையை எடுத்து வந்தனர்.
பின்னர் அந்த உருவ பொம்மையை நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மேற்கூரை பகுதிக்கு சென்று தூக்கிலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகி கள் கவிபாண்டியன், பரணி இசக்கி, கெங்கராஜ், பிவிடி.ராஜேந்திரன், ரசூல் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.