தமிழ்நாடு செய்திகள்

மகாராஷ்டிரா கிரேன் விபத்து- பலியான கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் உடல் இன்று இரவு சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது

Published On 2023-08-01 12:44 IST   |   Update On 2023-08-01 12:44:00 IST
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வி.எஸ்.எல். லிமிடெட் எனும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்தார்.
  • சந்தோஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது உருவ படத்திற்கு முன்பு கதறி அழுதனர்.

கிருஷ்ணகிரி:

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலம் கட்டுமான பணியின்போது ராட்சத கிரேன் இடிந்து விழுந்த விபத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரியை அடுத்த போகனப்பள்ளி வி.ஐ.பி. நகரை சேர்ந்த இளங்கோவன்-ஜெயலட்சுமி தம்பதியின் மகன் சந்தோஷ். இவருக்கு திருமணமாகி ரூபி என்ற மனைவியும், அத்விக் என்ற மகனும், அனமித்ரா என்ற மகளும் உள்ளனர்.

இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வி.எஸ்.எல். லிமிடெட் எனும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பாலம் கட்டுமான பணியின்போது ராட்சத கிரேன் இடிந்து விழுந்த விபத்தில் சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சந்தோஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது உருவ படத்திற்கு முன்பு கதறி அழுதனர்.

சந்தோஷின் உடல் இன்று இரவு விமானம் மூலம் கிருஷ்ணகிரிக்கு எடுத்து வரப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News