தமிழ்நாடு செய்திகள்
மதுரை ரெயில் தீ விபத்து: சுற்றுலா நிறுவனம் மீது வழக்கு
- ரெயில் தீ விபத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை கைது செய்யவும் லக்னோ போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை:
உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த பயணிகள் ரெயில் இன்று அதிகாலை மதுரை ரெயில் நிலையம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ரெயில் தீவிபத்து தொடர்பாக தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் மீது தென்னக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை கைது செய்யவும் லக்னோ போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.