விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்த லாரி
வாலாஜா அருகே லாரி-பைக் மோதி தீப்பற்றி எரிந்தது: வாலிபர் உயிரிழப்பு
- லாரியின் முன் பகுதி மற்றும் பைக்கில் தீ பரவியதால் இரு வாகனங்களும் நெடுஞ்சாலையில் பற்றி எரிந்தது.
- காவேரிப்பாக்கம் போலீசார் கருகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே வழியாக வந்த பைக் வாலாஜா அடுத்த சுமைதாங்கி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரியும் பைக்கும் திடீரென தீப்பற்றி எரிந்தது. லாரியின் முன் பகுதி மற்றும் பைக்கில் தீ பரவியதால் இரு வாகனங்களும் நெடுஞ்சாலையில் பற்றி எரிந்தது.
லாரியின் அடியில் சிக்கிய பைக் தீப்பற்றி எரிந்தது. இதனால் தீயில் சிக்கிய பைக்கில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்து இறந்து கிடந்த வாலிபர் உடலை மீட்டனர்.
காவேரிப்பாக்கம் போலீசார் கருகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.