தமிழ்நாடு செய்திகள்

கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டியது அரசின் கடமை- சென்னை ஐகோர்ட்டு அதிரடி

Published On 2023-05-20 16:09 IST   |   Update On 2023-05-20 16:09:00 IST
  • கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும்
  • ஆர்.டி.இ சட்டத்தில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான செலவை அரசு தான் ஏற்க வேண்டும்.

சென்னை:

கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வேலூரில் சீருடை, புத்தகங்களுக்காக ரூ.11,977 கட்டணமாக செலுத்த தனியார் பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டதை அடுத்து ஆர்.டி.இ-ல் சேர்ந்த மாணவரின் தந்தை மகாராஜா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஆர்.டி.இ சட்டத்தில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான செலவை அரசு தான் ஏற்க வேண்டும். மாணவர்களுக்கு புத்தகம், சீருடை கட்டணங்களையும் வழங்க வேண்டியது அரசின் கடமை என்று கூறியுள்ளது. மேலும் இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை 2 வாரங்களில் பிறப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News