தமிழ்நாடு செய்திகள்
வீரர்கள் அருகில் உட்கார்ந்து பார்க்கலாம்: போலி இணைய தளம் மூலம் ஐபிஎல் டிக்கெட் மோசடி
- போலி புக்கிங் இணைய தளம் தொடங்கி ஐபிஎஸ் டிக்கெட் மோசடி செய்துள்ளனர்.
- சென்னை மற்றும் ஐதராபாத்தில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை-பெங்களூரு போட்டியின்போது, அதிகளவு டிக்கெட்டுகளை விற்பனை செய்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போலி புக்கிங் இணைய தளம் தொடங்கி ஐபிஎஸ் டிக்கெட் மோசடி செய்துள்ளனர். பிரபல புக்கிங் இணையதளங்களின் பெயரில் போலியாக இணையதள பக்கம் தொடங்கி மோசடி செய்துள்ளனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்களின் அருகேயே அமர்ந்து போட்டியை பார்க்கலாம் என ஒரு கும்பல் பல லட்சம் மோசடி செய்துள்ளது.
இதையடுத்து சென்னை மற்றும் ஐதராபாத்தில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.