தமிழ்நாடு

சிலைக்கடத்தல் மன்னன் தீனதயாளன் உயிரிழந்தார்

Published On 2022-12-08 13:07 GMT   |   Update On 2022-12-08 13:07 GMT
  • சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் கூட்டாளியாக திகழ்ந்தவர் தீனதயாளன்
  • பல்வேறு வழக்குகளில் தீனதயாளனின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.

சென்னை:

சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த சிலைக்கடத்தல் மன்னன் தீனதயாளன் உயிரிழந்தார். கடந்த இரண்டு ஆண்டு காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தீனதயாளன் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 83.

கலைப்பொருட்கள் விற்பனை மையம் என்ற போர்வையில் மறைமுகமாக சிலைக்கடத்தல் வேலைகளை செய்து வந்த கும்பலில் முக்கியமானவர் தீனதயாளன். சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் கூட்டாளியாக திகழ்ந்த இவர் தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் உள்ள சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்த வழக்கல் கைது செய்யப்பட்டவர். பல்வேறு வழக்குகளில் அவரது பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. 2 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அப்ரூவராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News