தமிழ்நாடு

பெட்ரோல் குண்டு வீச்சு- உயர்நீதிமன்ற நீதிபதி நேரில் ஆய்வு

Published On 2023-11-10 09:45 GMT   |   Update On 2023-11-10 09:45 GMT
  • சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற கோபத்தில் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக தகவல்.
  • உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறையின் கீழ் செயல்படும் டிரஸ்டின் கீழ் இந்த கோயில் உள்ளது.

சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு ஜங்ஷனில் உள்ள வீரபத்ர சுவாமி தேவஸ்தானத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணா என்பவர் கோவில் அருகே ஜிகே டிரேடர்ஸ் என்ற கடை நடத்தி வருகிறார்.

விசாரணையில், சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற கோபத்தில் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கோவிலில் வீசியது தெரிய வந்தது.

இதையடுத்து, பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணாவை கொத்தவால் சாவடி போலீசார் கைது செய்தனர். மேலும் முரளி கிருஷ்ணா மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் பீர் பாட்டில்கள் சிதறி கொட்டிய இடத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி நிரஞ்சன் நேரில் ஆய்வு செய்துகின்றனர். உடன் தடவியல் நிபுணர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறையின் கீழ் செயல்படும் டிரஸ்டின் கீழ் இந்த கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News