கவர்னர் ஆர்என் ரவி
கவர்னர் டெல்லி பயணத்தின் நோக்கம் என்ன?
- தி.மு.க. அமைச்சர்கள் மீது அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி பெரிய ஆதாரங்களை கொடுத்து விட்டு வந்துள்ளாராம்.
- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை கவர்னர் ரவி சமீபத்தில் மிகக் கடுமையாக விமர்சித்தார்.
கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆள் ஆளுக்கு மனதில் தோன்றியதை எல்லாம் சொல்லி பரபரப்பை அதிகப்படுத்தி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றி விவாதிக்கப்படுகிறது.
உண்மையில் கவர்னர் ரவி எதற்காக டெல்லி சென்று இருக்கிறார்?
* தி.மு.க. அமைச்சர்கள் மீது அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி பெரிய ஆதாரங்களை கொடுத்து விட்டு வந்துள்ளாராம். இதுபற்றி விவாதிக்கவே கவர்னரை அமித்ஷா அழைத்துள்ளார் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.
* பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை கவர்னர் ரவி சமீபத்தில் மிகக் கடுமையாக விமர்சித்தார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தென் இந்தியாவில் எப்படி செயல்படுகிறது என்பதை மத்திய உள்துறைக்கு விரிவான விளக்கமாக கொடுத்தது கவர்னர் ரவிதான். எனவே அதுபற்றி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து முடிவுகள் எடுக்கவே டெல்லியில் இருந்து கவர்னருக்கு அழைப்பு வந்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
* தமிழக அரசின் மசோதாக்களில் சிலவற்றை கவர்னர் ரவி இன்னமும் ஏற்காமல் உள்ளார். குறிப்பாக பல்கலைக்கழக வேந்தர் பற்றிய விவகாரம். இது தொடர்பாக டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவுகள் எடுக்கவே அவர் சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.