தமிழ்நாடு

குளியல் அறையில் வழுக்கி விழுந்து அரசு பஸ் கண்டக்டர் உயிரிழப்பு

Update: 2022-09-30 04:09 GMT
  • லட்சுமிகாந்தனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
  • மனைவி புவனேஸ்வரி குளியலறைக்கு சென்று பார்த்தபோது லட்சுமிகாந்தன் வழுக்கி விழுந்த நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மலையடி புதூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிகாந்தன் (56). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

லட்சுமிகாந்தனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதன்பின் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் குளியலறைக்கு சென்ற லட்சுமிகாந்தன் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.

இதையடுத்து அவரது மனைவி புவனேஸ்வரி குளியலறைக்கு சென்று பார்த்தபோது அங்கு வழுக்கி விழுந்த நிலையில் லட்சுமிகாந்தன் மயக்க நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு லட்சுமிகாந்தனை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News