தமிழ்நாடு செய்திகள்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு

Published On 2023-08-30 15:20 IST   |   Update On 2023-08-30 15:20:00 IST
  • சென்னையில் தங்கம், வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
  • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

சென்னை:

சென்னையில் தங்கம், வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.5500 ஆகவும், பவுனுக்கு ரூ.44 ஆயிரம் ஆகவும் இருந்தது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.5530 ஆகவும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ. 44,240-க்கு விற்பனையானது.

வெள்ளி விலை கிலோவுக்கு இன்று ரூ.500 உயர்ந்து ரூ.80,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள் மற்றும் ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் விலை அதிகரித்து காணப்படுகிறது என்று வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News