தமிழ்நாடு செய்திகள்
தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரிப்பு
- தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஓணம் பண்டிகை நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ. 5,500-க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 44 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,480 ஆகவும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43,840 ஆகவும் இருந்தது.
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.80,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.