தமிழ்நாடு செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்தது
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
சென்னை:
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்து ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.66 குறைந்து ரூ.5,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.73,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.