தமிழ்நாடு செய்திகள்

கூட்டணி குறித்து பொதுக்குழு முடிவு எடுக்கும்: இந்தியா என்ற பெயரே போதுமானது- ராமதாஸ் பேட்டி

Published On 2023-09-10 13:38 IST   |   Update On 2023-09-10 13:59:00 IST
  • சமூக நீதிதான் எல்லாவற்றிற்கும் சரியான பரிகாரம்.
  • பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை கட்சியின் செயற்குழு பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்.

கும்பகோணம்:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது 85-வது பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் 90 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

குறுவை சாகுபடி தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். கர்நாடகா அரசு தற்போது தண்ணீர் தர மறுக்கிறது. தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ்கிறோம் . சமூக நீதிதான் எல்லாவற்றிற்கும் சரியான பரிகாரம்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை கட்சியின் செயற்குழு பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றுவதற்கு தமிழக காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

தற்போது உள்ள இந்தியா பெயரே போதும் . பாரத் என்ற பெயர் தேவையில்லை என நான் கருதுகிறேன்.

தமிழக அரசின் இரண்டு ஆண்டு செயல்பாடு குறித்து இன்னும் மதிப்பெண் போடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News