தமிழ்நாடு

கருட சேவையின்போது பெருமாள் சிலை சரிந்ததால் பரபரப்பு

Published On 2024-05-22 04:31 GMT   |   Update On 2024-05-22 06:02 GMT
  • பெருமாள் சிலை சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
  • சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் வாசல் கதவு திறக்கப்பட்டது.

சென்னை:

சென்னை திருவொற்றியூர் கல்யாண வரதராஜர் பெருமாள் கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. பவள வண்ண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

கருட சேவை நிகழ்ச்சியின்போது பல்லக்கை தூக்கியபோது அதன் தண்டு உடைந்து பெருமாள் சிலை கீழே சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெருமாள் சிலை சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பட்டாச்சாரியார் முரளிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

பெருமாள் சிலை சரிந்ததும் உடனடியாக கோவில் வாசல் மூடப்பட்டது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் வாசல் கதவு திறக்கப்பட்டது.

மீண்டும் கருட வாகனத்தில் எழுந்தருளி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

Similar News