தமிழ்நாடு செய்திகள்

கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 தொழிலாளர்கள் பலி- ஒப்பந்ததாரர் மீது வழக்கு

Published On 2023-07-04 19:55 IST   |   Update On 2023-07-04 19:55:00 IST
  • கட்டுமான பணி நடைபெற்றபோது பழைய சுவர் திடீரென தொழிலாளர்கள் மீது இடிந்து விழுந்துள்ளது.
  • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கோவை:

கோவையில் இன்று தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து  கட்டுமான தொழிலாளர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்லூரியில் ஏற்கனவே இருந்த சிறிய பக்கவாட்டு சுவரை ஒட்டி புதிதாக 10 அடி உயரம் கொண்ட பக்கவாட்டு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பழைய சுவர் திடீரென தொழிலாளர்கள் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். இறந்தவர்களில் 3 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News