தமிழ்நாடு

யானைகளை மறித்து புகைப்படம் எடுத்த வாகன ஓட்டிகளை காணலாம்.

ஊட்டி செல்லும் சாலையில் யானைகளுக்கு தொல்லை கொடுத்த வாகன ஓட்டிகள்- வனத்துறையினர் எச்சரிக்கை

Published On 2023-02-08 08:15 GMT   |   Update On 2023-02-08 08:15 GMT
  • சாலையை கடக்க நின்ற அந்த யானைகளை கடக்க விடாமல் காரை விட்டு மறித்து அதில் இருந்தவர்கள் புகைப்படம் எடுத்தனர்.
  • யானைகள் அச்சம் அடைந்து அங்கும் இங்குமாக சென்று மிரண்டன.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் மஞ்சூா், கெத்தை, முள்ளி வழியாக ஊட்டி செல்லக்கூடிய சாலை அடா்ந்த வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்த சாலையில் வன விலங்குகள் நடமாட்டம் காணப்படுவது வழக்கம்.

இந்நிலையில், காரமடை வழியாக ஊட்டிக்கு இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த சுற்றுலா பயணிகள் கெத்தை மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த 5 காட்டு யானைகளை தொந்தரவு செய்ததுடன், ஆபத்தை உணராமல் அவற்றுடன் விளையாட்டில் ஈடுபட்டனா்.

சாலையை கடக்க நின்ற அந்த யானைகளை கடக்க விடாமல் காரை விட்டு மறித்து அதில் இருந்தவர்கள் புகைப்படம் எடுத்தனர். இதேபோல அந்த வழியாக ஜீப்பில் வந்தவர்களும் இவ்வாறு புகைப்படம் எடுத்தனர்.

இதனால் யானைகள் அச்சம் அடைந்து அங்கும் இங்குமாக சென்று மிரண்டன. யானைகள் ஆவேசப்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதை உணராமல் அந்த வாகன ஓட்டிகள் இவ்வாறு யானைகளை தொந்தரவு செய்து படம் பிடித்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. எனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கின ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News