தமிழ்நாடு செய்திகள்

பழைய பென்சன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு திட்டத்தை வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2023-10-05 15:45 IST   |   Update On 2023-10-05 15:45:00 IST
  • புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை தமிழக அரசு அமுல்படுத்த வேண்டும்.
  • 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்தையை உடனடியாக துவங்க வேண்டும்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசு போக்குவரத்த கழக ஓய்வூதியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை தமிழக அரசு அமுல்படுத்த வேண்டும்.

மேலும் பல ஆண்டுகளுக்கு மேலாக வாரிசு பணிக்கு பதிந்து காத்திருப்பவர்களுக்கு ஆண்டுதோறும் வாரிசு பணி வழங்க வேண்டும் என்றும், போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள் காலி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் எடுக்காமல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து காத்திருப்பவர்களுக்கு தகுதி மூப்பின் அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 1.9.2023 முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் அமுல்படுத்த வேண்டியுள்ளதால் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்தையை உடனடியாக துவங்க வேண்டும். மேலும் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News