தமிழ்நாடு செய்திகள்

இயக்குனர் வேல்சத்ரியன்

ஆபாச படம் எடுத்த சினிமா இயக்குனரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

Published On 2022-09-10 15:23 IST   |   Update On 2022-09-10 15:23:00 IST
  • வேல் சத்ரியனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் சேலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
  • வேல்சத்ரியனிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை போலீசார் கேட்டு வருகிறார்கள்.

சேலம்:

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் வேல்சத்ரியன் (வயது 38), இவர் சினிமா படம் எடுப்பதாக கூறி பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர்களை ஆபாசமாக படம் எடுத்ததாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து வேல்சத்ரியன், அவரது உதவியாளர் ஜெயஜோதி (23) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களது அலுவலகத்தில் சோதனை செய்தபோது கம்ப்யூட்டர், பென்டிரைவ், ஹார்டுடிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இளம் பெண்களின் அரை நிர்வாண படங்கள் உள்பட பல ஆபாச படங்கள் இருந்தன.

இந்த நிலையில் சிறையில் உள்ள வேல் சத்ரியனின் பெண் உதவியாளர் ஜெயஜோதியை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தனக்கும் வேல் சத்ரியனுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது. யாரிடமெல்லாம் அவர் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என்பது குறித்தும் கூறி உள்ளார்.

தனக்கு வேல்சத்ரியன் சம்பளம் வழங்கவில்லை, எப்போதாவது பணம் தருவார், மேலும் பல பெண்களை அவர் நிர்வாணமாக படம் எடுத்ததாகவும் கூறி உள்ளார். இதையடுத்து ஜெயஜோதியை அவர்கள் நடத்தி வந்த அலுவலகத்திற்கும் அழைத்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் 3 நாட்கள் காவல் முடிந்ததை அடுத்து ஜெயஜோதியை நேற்று போலீசார் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை மீண்டும் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே வேல் சத்ரியனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் சேலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்ற நடுவர் தினேஷ் அவரை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து உதவி கமிஷனர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் யார்? யாரை மிரட்டி வேல்சத்ரியன் ஆபாச படம் எடுத்தார், யார்? யாருடன் உல்லாசமாக இருந்தார், எத்தனை பேரிடம்? எவ்வளவு பணம்? வசூல் செய்தார் என்பது குறித்தும் கிடுக்கிப்பிடி கேள்விகளை போலீசார் கேட்டு வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Tags:    

Similar News