தமிழ்நாடு செய்திகள்
வாக்கு எண்ணிக்கையையொட்டி 7 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
- ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்றது.
- வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் இன்று நடைபெறுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இதையொட்டி அந்த கல்லூரியின் சுற்றுவட்டார பகுதிகளான எலவுமலை, சுண்ணாம்பு ஓடை, சித்தோடு ஆகிய இடங்களில் உள்ள 7 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.