தமிழ்நாடு செய்திகள்
கரிகாலன்
தி.மு.க. பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை
- மண்டபம் பூட்டி கிடந்ததை அடுத்து கறம்பக்குடி குழந்திரான்பட்டு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.
- கரிகாலன் வீட்டில் அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கறம்பக்குடி:
திண்டுக்கல் ரத்தினத்தின் மருமகனும், ராமச்சந்திரனின் தொழில் பங்குதாரருமான கறம்பக்குடி குழந்திரான்பட்டு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் கரிகாலன் இன்று புதிதாக அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கியுள்ளார்.
முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 கார்களில் கரிகாலனுக்கு சொந்தமான பன்னீர்தேவர் திருமண மண்டபத்திற்கு இன்று காலை சென்றனர்.
மண்டபம் பூட்டி கிடந்ததை அடுத்து கறம்பக்குடி குழந்திரான்பட்டு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டில் கரிகாலனின் தாயார் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் உள்ளனர். கரிகாலன் சென்னையில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் கரிகாலன் வீட்டில் அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் கரிகாலன் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக தெரிகிறது.