தமிழ்நாடு

புதுவையில் வட மாநில பெண்கள் கொண்டாடிய துர்கா பூஜை

Published On 2022-10-06 05:29 GMT   |   Update On 2022-10-06 05:29 GMT
  • 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு துர்கா பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
  • 10 நாட்கள் நடைபெறும் துர்கா பூஜா விழாவில் 9 நாட்கள் விரதமிருந்து 10-வது நாள் துர்கா சிலையை கடலில் கரைப்பார்கள்.

புதுச்சேரி:

புதுவையில் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலங்களை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றன.

மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த குடும்பத்தினர் ஒருங்கிணைந்து மாதூகா நார்ய சக்தி என்ற பெயரில் ஆன்மீக அமைப்பை நடத்தி வருகின்றனர்.

இதன் சார்பில் ஆண்டுதோறும் துர்கா பூஜை நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் துர்கா பூஜா விழாவில் 9 நாட்கள் விரதமிருந்து 10-வது நாள் துர்கா சிலையை கடலில் கரைப்பார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக விழா கொண்டாடப்படவில்லை.

2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு துர்கா பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது. 9 நாட்களும் விரதம் இருந்து தினமும் பல்வேறு பூஜைகளை முடித்த பெண்கள் வேனில் துர்கா சிலையை வைத்து ஊர்வலமாக கடற்கரைக்கு கொண்டு வந்தனர். வடமாநில இசையுடன் ஆண்கள் துர்க்கா சிலையை கடலில் கரைத்தனர்.

Tags:    

Similar News