தமிழ்நாடு செய்திகள்

ம.தி.மு.க. மாணவரணி நிர்வாகிகள் கூட்டம்- துரை வைகோ பங்கேற்பு

Published On 2022-12-17 13:54 IST   |   Update On 2022-12-17 13:54:00 IST
  • பட்டியல் இன மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கு மான இடஒதுக்கீடு ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் முறையாக நிரப்பப்படாமல் இருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
  • சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை ஒன்றிய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை:

ம.தி.மு.க. மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் கூட்டம், தலைமைக்கழகம் தாயகத்தில் மாநில மாணவர் அணிச் செயலாளர் பால சசிகுமார் தலைமையில் நடந்தது.

துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தொடக்க உரை ஆற்றினார். தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும் மாநில ஆளுநர் பொறுப்புகள் தேவையில்லை என்பதை அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம் மூலம் கொண்டுவர வேண்டுமென ஒன்றிய அரசையும், அனைத்துக் கட்சிகளையும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

பட்டியல் இன மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கு மான இடஒதுக்கீடு ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் முறையாக நிரப்பப்படாமல் இருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை ஒன்றிய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News