தமிழ்நாடு

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம்... வெற்றிகரமாக நிறைவு செய்த மாற்றுத்திறனாளி

Published On 2022-09-21 12:16 GMT   |   Update On 2022-09-21 12:16 GMT
  • இளைய சமுதாயம் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
  • நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கி.மீ. என சைக்கிள் ஓட்டிய மகேஷ், ஜம்மு காஷ்மீரை வெற்றிகரமாக அடைந்தார்.

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் கணியாகுளம் பாறையடி ஊரைச் சேர்ந்தவர் மகேஷ் (54). ஒரு காலை இழந்த மாற்றத்திறனாளியான இவர், இன்றைய இளைய சமுதாயம் தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியுடன் செயல்பட்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து, சைக்கிள் பயணத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.


நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கி.மீ. என சைக்கிள் ஓட்டிய மகேஷ், ஜம்மு காஷ்மீரை வெற்றிகரமாக அடைந்தார். பின்னர் அங்கிருந்து ரெயில் மூலம் ஊர் திரும்பினார். அவரை நாகர்கோவில் மாநராட்சி மேயர் மகேஷ் வரவேற்று வாழ்த்தினார்.

Tags:    

Similar News