தமிழ்நாடு செய்திகள்

தேவநேயப் பாவாணருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

Published On 2023-02-07 13:32 IST   |   Update On 2023-02-07 14:54:00 IST
  • தனித்தமிழ் இயக்கத்துக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்துக்கும் தன் வாழ்நாள் எல்லாம் உழைத்தவர்.
  • தமிழின் உண்மையான பணிகளுக்காக வழிகாட்டிய தமிழுணர்வாளர்.

சென்னை:

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் பிறந்தநாளை யொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

தனித்தமிழ் இயக்கத்துக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்துக்கும் தன் வாழ்நாள் எல்லாம் உழைத்தவர் திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர். தி.மு.க. அரசின் தமிழ் காக்கும் பணிகளை மெச்சி, 'தி.மு.க. அரசே தமிழ்நாட்டை வழி வழி ஆள்க' என வாழ்த்தி, தமிழின் உண்மையான இயல்பையும் வரலாற்றையும் அறிந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிப்படுத்துதல் வேண்டும் என நம் பணிகளுக்கு வழிகாட்டிய தமிழுணர்வாளர்.

தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, தமிழர் மதம், தமிழர் திருமணம், திருக்குறள் உரை எனத் தமிழின் தனிச்சிறப்பை நிறுவ தனிமனிதப் பல்கலைக்கழகமாக அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டை அவரது பிறந்தநாளில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News