தமிழ்நாடு செய்திகள்

தரைப்பாலம் துண்டிப்பு- 10 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-10-21 11:23 IST   |   Update On 2022-10-21 11:23:00 IST
  • கடந்த சில நாட்களுக்கு முன் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பாலத்தின் கிழே பெருக்கெடுத்து ஓடியது.
  • கிராம மக்களின் பிரதான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

காட்டுமன்னார்கோவில்:

வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கன மழை நீடித்து வருகிறது. தொடர்ந்து மழை நீடித்து வருவதால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

காட்டுமன்னார்கோவில் அருகே எடையார், திருமூஸ் தானம் கிராமத்தை இணைக்கும் மண்வாய்க்கால் தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அருகே உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு அத்தியாவசிய தேவைகளுக்காகவும், பள்ளி கல்லூரி மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று வரவும் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பாலத்தின் கிழே பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் மண வளி தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது.இதனால் தற்போது பொதுப்பணித் துறையினர் பனைமரத்தினை கொண்டு வழி அமைத்து கொடுக்கும் பணியினை மேற்கொண்டனர். இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

எனவே காட்டுமன்னார்கோவிலில் இருந்து கெற்கிருப்பு, அழிச்சமங்கலம் வழி தடங்கள் மூலம் எடையார் வழியாக 10 கிராமங்களுக்கும் பேரக்குவரத்து வசதி செய்து தரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News