தமிழ்நாடு செய்திகள்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் பொங்கல் விழா கொண்டாடிய கலெக்டர்

Published On 2023-01-16 12:48 IST   |   Update On 2023-01-16 12:48:00 IST
  • செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கானத்தூர் அருகே தனியார் கலை, கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
  • பல்வேறு நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

மாமல்லபுரம்:

தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கானத்தூர் அருகே தனியார் கலை, கலாச்சார மையத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். அவர்கள் மண்பானையில் பொங்கல் வைத்தனர்.

விழாவில் கரகம் ஆடுதல், உறியடித்தல், மாட்டுவண்டி பயணம், கிளி ஜோசியம் பார்த்தல், உள்ளிட்ட விளையாட்டுகளும் நடத்தப்பட்டன. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றும், கண்டும் ரசித்தனர்.

அப்போது மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலையில கரகம் வைத்து ஆடி அசத்தினர். மேலும் அவர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்.

கும்மியடித்தல், கரகம் ஆடுதல், மாட்டு வண்டி பயணம் உள்ளிட்டவற்றில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்று நெகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News