தமிழ்நாடு

மறைமலை நகரில் 200 ஏக்கர் நிலத்தில் வசதிகளை மேம்படுத்த சி.எம்.டி.ஏ. திட்டம்

Published On 2022-09-25 09:16 GMT   |   Update On 2022-09-25 09:16 GMT
  • சென்னை பெருநகர பகுதிக்கான முதல் மாஸ்டர் திட்டத்தின் ஒரு பகுதியாக 1980-ம் ஆண்டு மறைமலைநகர் பகுதி புதிய நகரமாக உருவாக்கப்பட்டது.
  • மறைமலைநகரில் 200 ஏக்கர் நிலத்தை மேலும் வசதிகளுடன் மேம்படுத்த சி.எம்.டி.ஏ. திட்டமிட்டுள்ளது.

சென்னை:

சென்னை நகருக்கு இணையாக தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. புறநகர் பகுதிகளில் மக்கள் குடியேறுவது தற்போது அதிகரித்து வருகிறது.

எனினும் இப்பகுதிகளில் போதிய வசதிகள் இல்லாததால் அதனை மேம்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டு உள்ளது.

சென்னை பெருநகர பகுதிக்கான முதல் மாஸ்டர் திட்டத்தின் ஒரு பகுதியாக 1980-ம் ஆண்டு மறைமலைநகர் பகுதி புதிய நகரமாக உருவாக்கப்பட்டது. இது நகரின் மையப்பகுதியில் இருந்து சுமார் 45 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த செயற்கைகோள் நகரம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. தொழிற்சாலைகள், குடியிருப்புகள் வணிக நிறுவனங்கள், பள்ளி, வங்கிகள், நூலகம், ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில் மறைமலைநகரில் 200 ஏக்கர் நிலத்தை மேலும் வசதிகளுடன் மேம்படுத்த சி.எம்.டி.ஏ. திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.எம்.டி.ஏ. தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் மறைமலைநகரில் புதிய நகர் திட்டத்தில் பல்வேறு மேம்பாட்டு வசதி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரி ஒருவர் கூறும் போது, 'சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மறைமலைநகரில் 200 ஏக்கர் நிலம் விரைவில் மேம்படுத்தப்பட உள்ளது.

Tags:    

Similar News