தமிழ்நாடு

சந்திராயன் ஏவியதன் மூலமாக உலக அரங்கில் இந்தியா புகழ் பெற்றுள்ளது- இயக்குநர் பேச்சு

Published On 2023-05-14 10:16 GMT   |   Update On 2023-05-14 10:16 GMT
  • பட்டம் பெறுவதற்காக 1,152 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
  • இந்தியா விண்வெளியில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

நெல்லை:

நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2020 மற்றும் 2021-ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் சித்தார்தன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மைய நிகழ்ச்சி இயக்குநரும், அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் முன்னாள் மாணவியுமான நிகர் ஷாஜி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், சிறப்பிடம் பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கினார்.

பட்டம் பெறுவதற்காக 1,152 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இன்று இளநிலை படிப்பில் 542 பேரும், முதுகலை படிப்பில் 56 பேரும் என மொத்தம் 598 பேர் பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பின்னர் சிறப்பு விருந்தினர் நிகர்ஷாஜி கூறும்போது, இந்த கல்லூரியின் முன்னாள் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன். இந்தியா விண்வெளியில் முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறது.

சந்திராயன்-1 மற்றும் சந்திராயன்-2 ஏவியதன் மூலம் உலக அரங்கில் இந்தியா புகழ் பெற்றுள்ளது என்றார்.

இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News