தமிழ்நாடு செய்திகள்

சென்னம்பட்டி வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தபோது எடுத்த படம்.

அம்மாபேட்டை அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு

Published On 2023-07-01 10:34 IST   |   Update On 2023-07-01 10:34:00 IST
  • விவசாய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
  • வனத்துறையினர் ஆடுகளைக் கடித்து குதறிய விலங்கின் கால் தடங்களை பார்த்து ஆய்வு செய்தபின் சிறுத்தை என உறுதி செய்தனர்.

அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் அடிக்கடி ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்று வருவதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளித்திருப்பூர் குரும்பனூர்காடு பகுதியில் பழனிச்சாமி என்பவரது தோட்டம் சென்னம்பட்டி வனச்சரக்கத்தை ஒட்டியுள்ளது. அங்கு அவரது விவசாய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டதால் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன்புறத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த 2 வெள்ளாடுகள் காணவில்லை.

இதையடுத்து அருகே உள்ள தோட்டத்தில் தேடியபோது காட்டிற்குள் மர்ம விலங்கு ஆடுகளை ஆங்காங்கே கடித்து உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வனத்துறையினர் அந்த பகுதியை பார்வையிட்டனர்.

வனத்துறையினர் ஆடுகளைக் கடித்து குதறிய விலங்கின் கால் தடங்களை பார்த்து ஆய்வு செய்தபின் சிறுத்தை என உறுதி செய்தனர்.

இதை தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க தீவிர ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஆட்டை கடித்துக் கொன்ற பகுதியில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து அதில் ஆட்டை கட்டி வைத்து உள்ளனர்.

Tags:    

Similar News