தமிழ்நாடு செய்திகள்

பஞ்சாபில் துப்பாக்கி சூட்டில் இறந்த ராணுவ வீரர் கமஷே் உடலுக்கு ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். 

பஞ்சாபில் துப்பாக்கி சூட்டில் இறந்த சேலம் ராணுவ வீரரின் உடல் கோவை வந்தது

Published On 2023-04-14 14:46 IST   |   Update On 2023-04-14 14:46:00 IST
  • கமலேஷ் சேலம் மாவட்டம் மசக்காளியூரை சேர்ந்தவர்.
  • உடலுக்கு ராணுவ வீரர்களும், முன்னாள் ராணுவத்தினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கோவை:

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு நடந்தது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பீரங்கி படைப் பிரிவை சேர்ந்த கமலேஷ்(வயது24), யோகேஷ் குமார்(24), சந்தோஷ் நகரல்(25) மற்றும் சாகர் பன்னே(25) ஆகியோர் உயிரிழந்தனர்.

இதில் கமலேஷ் சேலம் மாவட்டம் மசக்காளியூரை சேர்ந்தவர். கமலேசின் உடல் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

கோவை விமான நிலைய சரக்கு முனையத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கமலேசின் உடலை பெற்று கொண்டனர்.

பின்னர் கோவை விமான நிலைய சரக்கு முனையத்தில் கமலேஷின் உடலுக்கு ராணுவ வீரர்களும், முன்னாள் ராணுவத்தினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் கோவையில் இருந்து ராணுவ வீரர் கமலேசின் உடல் அமரர் ஊர்தி மூலம் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் கிராமத்திற்கு சாலை மார்க்கமாக எடுத்து செல்லப்பட்டது.

கமலேசின் உடலை அடக்கம் செய்ய அவரது சொந்த கிராமத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News