தமிழ்நாடு

களக்காடு தலையணையில் நீர்வரத்து குறைவாக இருப்பதை காணலாம்.

நீர்வரத்து குறைந்தது: களக்காடு தலையணையில் குளிக்க அனுமதி

Published On 2023-12-01 04:19 GMT   |   Update On 2023-12-01 04:20 GMT
  • காட்டாற்று வெள்ளம் கரை புரண்டதால் கடந்த 17-ந் தேதி முதல் தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
  • இன்று காலை நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

களக்காடு:

களக்காடு பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதுபோல களக்காடு தலையணையிலும் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டதால் கடந்த 17-ந் தேதி முதல் தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் தடை நீடிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே நீர்வரத்து குறைந்ததால் 8 நாட்களுக்கு பின் கடந்த 25-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையினால் தலையணையில் நேற்று காலை மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

அதே நேரத்தில் தலையணையை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இன்று காலை நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

Tags:    

Similar News