தமிழ்நாடு

இந்தியில் எழுதப்பட்ட அறிவிப்பு பதாகையை அதிகாரிகள் அகற்றிய காட்சி.

கடும் எதிர்ப்பு எதிரொலி- ரெயில் நிலையத்தில் இந்தியில் எழுதப்பட்ட அறிவிப்பு பதாகை அகற்றம்

Published On 2022-11-29 08:20 GMT   |   Update On 2022-11-29 08:20 GMT
  • ரெயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர், தமிழில் தகவல் தொடர்பு மையம் என எழுதப்பட்டிருந்தது.
  • இது அப்பட்டமான இந்தி திணிப்பு என புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர்.

திருப்பூர்:

திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர், தமிழில் தகவல் தொடர்பு மையம் என எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதிதாக அச்சிடப்பட்ட அறிவிப்பு பதாகை சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டது. இதில் தமிழுக்கு பதில் இந்தி எழுத்துக்களில் சகயோக் என எழுதப்பட்டிருந்தது. அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் வருவதால் அவர்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்டிருப்பதாக பலரும் எண்ணிய நிலையில் அதன் மேலே ஆங்கிலம், தமிழிலும் சகயோக் என அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அதன் அர்த்தம் பலருக்கும் புரியாத சூழல் ஏற்பட்டது.

இது அப்பட்டமான இந்தி திணிப்பு என புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர். பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் சேவை மையத்தின் முன்பு இந்தியால் எழுதி ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு பெயர் பதாகையை இன்று கிழித்து அகற்றினர்.

Tags:    

Similar News